(என்.வீ.ஏ.)
ரங்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (10) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை ஜெவ்னா கிங்ஸ் 7 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றிகொண்டது.
ரைலி ரூசோவ் அதிரடியாக குவித்த சதம் ஜெவ்னா கிங்ஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அவிஷ்க பெர்னாண்டோவும் பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார்.
கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
குசல் மெண்டிஸ் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
நேற்றைய போட்டியில் சதம் குவித்து அசத்திய பெத்தும் நிஸ்ஸன்க இன்றைய போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (30 - 2 விக்.)
இந் நிலையில் ஜோடி சேர்ந்த ரைலி ரூசோவ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 130 ஓட்டஙகளைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
அவிஷ்க பெர்னாண்டோ 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ரைலி ரூசோவ் 50 பந்துகளில் 10 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 108 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அணித் தலைவர் சரித் அசலன்க ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசை வீரர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதாலேயே கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
க்லென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களையும், ஏஞ்சலோ பெரேரா 34 ஒட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 27 ஓட்டங்களையும் அணித் தலைவர் திசர பெரேரா 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஏஞ்சலோ பெரேராவும் க்லென் பிலிப்ஸும் 2ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துர்திர்ஷ்டவசமாக ஏஞ்சலோ பெரேரா உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றார்.
பின்வரிசையில் துனித் வெல்லாலகே 13 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரைலி ரூசோவ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM