கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (10) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல, பலப்பிட்டிய, கணேமுல்ல, அம்பலாங்கொடை மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 37 வரையான வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது 55 வயதுடைய பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரும் 38 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ள நிலையில், பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM