இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

Published By: Digital Desk 7

10 Jul, 2024 | 05:28 PM
image

இன்றைய சூழலில் மேலத்தேய கலாச்சாரம் மீது மோகம் கொண்ட இளம் தலைமுறையினர் பாரம்பரிய சிகரட்டை புகைப்பதற்கு பதிலாக வேப் எனும் இலத்திரனியல் புகைப்பானை புகைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இது சிகரட் புகை பிடிப்பதற்கு மாற்று என்று கருதி, இவர்கள் இதனை புகைக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான இலத்திரனியல் புகைப்பான்  இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

சந்தையில் கிடைக்கும் புகையிலைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சிகரட்டை புகைப்பதால் அவர்களிடத்தில் ஒரு வகையினதான விரும்பத்தகாத மணம் வீசும். ஆரோக்கியம் கெடும். மேலும் சிலர் இத்தகைய பாரம்பரிய சிகரட் புகை பிடிப்பதில் அடிமையாகி இருப்பார்கள்.

இவர்களை அத்தகைய பழக்கத்திலிருந்து மீட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த இலத்திரனியல் புகைப்பான். இது ஒரு வகையில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு  அடிமையானவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கும் என்றாலும், தற்போது இத்தகைய இலத்திரனியல் புகைப்பானிலும் நிக்கோட்டின் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தகைய இலத்திரனியல் புகைப்பான் புகைப்பதும் ஆரோக்கியமானதும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல என்றும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய இலத்திரனியல் புகைப்பான் புகைபிடிப்பதாலும், பழகுவதாலும், அதற்கு அடிமையானவர்களும் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும்,வேப் எனப்படும் இலத்திரனியல் புகைப்பானிலும் அதிக புகைக்காக நிக்கோட்டின் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் புற்றுநோய், நுரையீரல் தொற்று பாதிப்புகள், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். எனவே பாரம்பரிய சிகரட் புகைப்பதற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ.!  அதே அளவிற்கு இத்தகைய இலத்திரனியல் புகைப்பான்களும் ஏற்படுத்துகிறது என வைத்தியர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

வைத்தியர் தீபா செல்வி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10