அறிமுக நடிகர் பாரி இளவழகன் தெருக்கூத்து கலைஞனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜமா' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜமா' எனும் திரைப்படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே வி என் மணிமேகலை, 'காலா' குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபாலா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லேர்ன் & டீச் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் தேவானந்த் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொலியில் தெருக்கூத்து கலைஞர்களின் கதை இது என்றும், இசைஞானியின் இசை தான் இப்படத்தின் வணிக முகவரி என்றும், குறிப்பிட்டிருப்பதால் இசைஞானியின் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
மேலும், பர்ஸ்ட் லுக் காணொலி இணையவாசிகளால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருவதால் இணையதள பட்டியலில் 'ஜமா' முதலிடத்தை பிடித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM