ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய தொடர் 'பிருந்தா'

Published By: Digital Desk 7

10 Jul, 2024 | 05:41 PM
image

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் திரிஷா முதன் முதலாக 'பிருந்தா' எனும் இணைய தொடரில் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். சோனி லைவ் எனும் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் இரண்டாம் திகதி முதல் வெளியாகவிருக்கும் இந்த இணைய தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சூரிய மனோஜ் வங்கலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த இணைய தொடரில் திரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ஜெயபிரகாஷ், ஆம்னி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இந்த இணைய தொடரை அடிங் அட்வர்டைசிங் எல்எல்பி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கொல்லா அவினாஷ் தயாரித்திருக்கிறார்.

இந்த இணையத் தொடரின் டீசரில் ஆந்திர மாநிலத்தில் இளம் வயதிலேயே பெண்களை சமூக ரீதியாக கட்டுப்படுத்தி அடையாளப்படுத்தும் சடங்கு முறைகளையும், அதிலிருந்து விடுதலை பெற்ற ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வையும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட  பெண்களுக்கு எதிரான உரிமைக்குரல் எழுப்புவதையும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் இதற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57