எனது நியமனத்தில் பிரச்சினை இருந்தால் நீதிமன்றம் செல்லவும் - மஹிந்தானந்தவுக்கு  முஜிபுர் பதில்

10 Jul, 2024 | 07:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதனைவிடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்ப்பதில் அர்த்தமில்லை. சட்டத்தின் பிரகாரமே மீண்டும் பாராளுமன்றம் வந்தேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மதுவரி கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தேர்தல் சட்டத்திற்கு முரண் என்பது தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியாதா? தேர்தல் ஆணைக்குழு ஒரு கட்சிக்கு மாத்திரம் சார்ப்பாக நடந்துகொள்ள கூடாது என்றார்.

இதன்போது சபைக்குள் வந்த முஜிபுர் ரஹ்மான் அது தொடர்பில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினாலேயே அறிவித்தது. அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காகவே நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினேன். ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த பணம் கொடுக்காது தேர்தலை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

நான் ஒன்றரை வருடம் காத்திருந்தேன். ஆனால் போட்டிக்கு இவர்கள் வரவில்லை. முடியாத நிலையில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்தேன். அதனால் எனது நியமனத்தில் தவறு இருந்தால் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாத நிலையிலேயே நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரவேண்டியேற்பட்டது.

இந்நிலையில் எனது நியமனம் தொடர்பில் குறை கூறியும், தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். வேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நான் சட்டப்படியே நியமிக்கப்பட்டுள்ளேன். உள்ளூராட்சி தேர்தலை நடத்தியிருந்தால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை...

2024-07-25 04:21:24
news-image

பொலிஸ்மா அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப்...

2024-07-25 04:17:39
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள்...

2024-07-25 04:13:36
news-image

விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள அமைச்சர் விஜேதாச?

2024-07-25 03:59:44
news-image

ஓய்வூதியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம்...

2024-07-24 20:55:57
news-image

கிழக்கில் கடந்த 10 வருடங்களாக ஆசிரிய...

2024-07-24 17:26:51
news-image

சடலங்களை தகனம் செய்தமைக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்...

2024-07-24 16:03:08
news-image

கொவிட்டில் மரணித்தவர்களை தகனம் செய்வதற்கு உத்தரவிட்டவர்களை...

2024-07-24 17:32:14
news-image

ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணத்தை 30 இலட்சமாக...

2024-07-24 15:56:13
news-image

தபால் மூல வாக்களிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியளிக்க...

2024-07-24 17:34:51
news-image

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள...

2024-07-24 19:14:15
news-image

முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடினாலும் மன்னிக்க...

2024-07-24 17:28:35