சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெயிலர்', நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டாரான டொக்டர் சிவ ராஜ்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பைரவனா கோனே பாதா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் உருவாகும் 'பைரவனா கோனே பாதா' திரைப்படத்தில் சிவ ராஜ்குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கும் படக் குழுவினர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் சிவ ராஜ்குமாரின் தோற்றம் - சில நூற்றாண்டு முந்தைய காலகட்டத்திய படம் என்பதையும், இந்த திரைப்படம் போர் பற்றிய படைப்பாக இருக்கும் என்பதையும், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெளிவுபடுத்தி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM