அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரபல வர்த்தகரான “கிளப் வசந்த” என்பவரின் மனைவியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பிரபல வர்த்தகரான கிளப் வசந்தவும் 38 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ள நிலையில், பிரபல பாடகியான கே. சுஜீவா மற்றும் கிளப் வசந்தவின் மனைவி உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கிளப் வசந்தவின் மனைவியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளரின் சகோதரியின் உடல் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகியான கே. சுஜீவாவும் மற்றைய நபரும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM