இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும் 'மாய புத்தகம்'

Published By: Digital Desk 7

10 Jul, 2024 | 04:48 PM
image

தமிழ் திரையுலகின் திறமை வாய்ந்த கலைஞர்களான ஸ்ரீகாந்த் - அசோக் - அபர்னதி- இணைந்து மிரட்டும் 'மாய புத்தகம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ரமா ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாய புத்தகம்' எனும் திரைப்படத்தில் அசோக், ஸ்ரீகாந்த், இளவரசு, அபர்னதி, 'ஆடுகளம்' நரேன், லோகேஷ், கே. எஸ். ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி விஜயானந்த் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வினோத் ஜெயின் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ் திரைப்படங்களின் பேய் பட மற்றும் அமானுஷ்ய படத்தின் இலக்கணப்படி பிரம்மாண்டமான கைவிடப்பட்ட பங்களா - நாகங்கள் - யாகங்கள்- கதாபாத்திரங்களின் அரசர் காலகட்டத்திய ஃபிளாஷ்பேக் + கிராபிக்ஸ், என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்கள் இருப்பதாலும்,  அனைத்து மர்மங்களின் தாயாக குறிப்பிடப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தை இருட்டு அறையில் முரட்டு தேவதை என விவரிக்கும் வசனங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்