ஐசிசியின் அதிசிறந்த வீர, வீராங்கனை விருதுகளை இந்தியர்கள் சுவிகரித்தனர் - ஜூன் மாதத்திற்கான அதிசிறந்த வீரர் பும்ரா, அதிசிறந்த வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா

Published By: Digital Desk 7

10 Jul, 2024 | 04:38 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மாதாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த வீரர், அதிசிறந்த வீராங்கனை ஆகிய ஜூன் மாதத்திற்கான விருதுகளை இந்தியர்கள் இருவர் சுவீகரித்துள்ளனர்.

ஐசிசியின் அதிசிறந்த வீரர் விருதை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா வென்றெடுத்ததுடன் ஐசிசியின் அதிசிறந்த வீராங்கனை விருதை அதிரடி துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா தனதாக்கிக்கொண்டார்.

இவர்கள் இருவருமே ஐசிசி மாதாந்த விருதுகளை வென்றது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் இந்தியர்கள் இருவர்  ஒரே மாதத்தில் அதி சிறந்த வீரராகவும், அதிசிறந்த வீராங்கனையாகவும் தெரிவானது இதுவே முதல் தடவையாகும்.

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெற்ற 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி இந்தியாயாவை சம்பியனாக்கியதன் மூலம் பும்ராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. உலகக் கிண்ணப் போட்டியின் தொடர்நாயகன் விருதையும் பும்ரா வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 15 விக்கெட்களுடன் பும்ரா 3ஆம் இடத்தில் இருந்தபோதிலும் அவரது பந்துவீச்சு சராசரி (8.26), எக்கொனமிக் ரேட் (4.17) என்பன மிகச் சிறப்பாக இருந்தது.

சிறந்த கட்டுப்பாட்டுடன் பந்துவீசியதுடன் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்களை சரித்த 30 வயதான பும்ரா மிகவும் அவசியமான நேரத்தில் மிக முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு சார்பான திருப்பங்களை ஏற்படுத்தும் கொடுத்திருந்தார். அவரது பந்துவீச்சில் எல்லா அணிகளுமே திணறிப்போயின.

குறிப்பாக இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றியை அண்மித்துக் கொண்டிருந்தபோது அதிரடி ஆட்டக்காரர் மார்க்கோ ஜென்சனை வெளியேற்றி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்தார்.

இதேவேளை, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா முழுமையான வெற்றிபெறுவதில் பெரும் பங்காற்றியதன் மூலம் மந்தனா, ஐசிசி மாதாந்த விருதை தனதாக்கிக்கொண்டார்.

பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியபோது ஸ்ம்ரித்தி மந்தனா அபாராமாகத் துடுப்பெடுத்தாடி 117 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 265 ஓட்டங்களாக அதிகரிக்க உதவினார்.

இரண்டாவது போட்டியிலும் அவர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 120 பந்துகளில் 136 ஓட்டங்களை விளாசினார்.

அடுத்த போட்டியில் அவர் தொடர்ச்சியாக 3ஆவது சதத்தைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் துரதிர்ஷ்டவசமாக 90 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

3 போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 343 ஓட்டங்ளை மந்தான குவித்தார்.

அவரது சராசரி 114.33ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக்ரேட் 103.93ஆக இருந்தது. இதன் மூலம் தொடர்நாயகி விருதை மந்தான வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலேசியாவை 114 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்களாதேஷ்...

2024-07-24 22:27:08
news-image

தாய்லாந்தை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக...

2024-07-24 22:23:51
news-image

இலங்கை குழாத்திலிருந்து துஷ்மன்த சமீர நீக்கம்...

2024-07-24 14:58:45
news-image

2027 உலகக் கிண்ணத்தில் ரோஹித், விராத் ...

2024-07-24 11:19:28
news-image

Colombo Panthers கூடைப்பந்தாட்ட கழகத்துக்கு Driveline...

2024-07-24 17:56:31
news-image

2024 ஐசிசி ரி20 உலகக் கிண்ணம்...

2024-07-23 18:12:26
news-image

ஒலிம்பிக் செல்லும் வீர்ரகளுக்கு ஊக்கமளித்த இராணுவ...

2024-07-24 17:59:39
news-image

இலங்கை ரி20 அணியின் புதிய அணித்...

2024-07-23 13:21:35
news-image

அறிமுக வீரருக்குரிய பந்துவீச்சு சாதனையை புதுப்பித்தார்...

2024-07-23 13:14:21
news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37