மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அருட்தந்தை ஒருவர் காயம் ; சந்தேக நபர் கைது

10 Jul, 2024 | 04:17 PM
image

மாத்தளை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அருட்தந்தை ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (09) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அருட்தந்தை மாத்தளை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பின்னர் ஆலயத்தை நோக்கி செல்வதற்காக தனது காரில் ஏற முற்படும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான அருட்தந்தை காயமடைந்த நிலையில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கூரிய ஆயுதம் மற்றும் லொறி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ;...

2025-02-11 15:15:10
news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18