புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக இலங்கையின் வர்த்தகத்துக்கு உதவும் அமெரிக்கா

10 Jul, 2024 | 03:06 PM
image

இலங்கையின் வர்த்தக தேசிய ஒற்றைச் சாளர முறைமையினை (Sri Lanka’s Trade National Single Window System - TNSWS) நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டின் வர்த்தகங்களுக்கு வசதியளிக்கும் உட்கட்டமைப்பினை நவீனமயமாக்குவதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக இலங்கை நிதி அமைச்சுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது. 

TNSWS முறைமையானது செயற்படும்போது, அதிகரித்த வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறன், குறைவான செலவுகள் மற்றும் சாத்தியமான அதிக வருமானம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வர்த்தகத்துக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதை ஒழுங்குபடுத்தும்.

எமக்கிடையே தொடரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக USAIDஇன் உதவியுடன் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களமானது அண்மையில் 94 முக்கிய TNSWS செயற்றிட்ட பங்குதாரர்களுக்கான ஒரு செயலமர்வினை நடத்தியது. 

இந்த ஊடாடும் செயலமர்வானது ஒற்றைச் சாளர அமைப்பு செயற்படும் விதம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய பங்கேற்பாளர்களின் புரிதலை அதிகப்படுத்தியது. 

இலங்கையின் TNSWSஇனை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறான தன்மை ஆகிய விடயங்களையும் இந்த செயலமர்வு ஊக்குவித்தது.

“ஒரு நீண்ட கால பங்காளராகவும்,  இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் விளங்கும் அமெரிக்காவானது ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வணிகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவி செய்கிறது. வணிக சவால்களை எளிதாக்கி, வர்த்தகத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடைதாகவும், எதிர்வுகூறக்கூடியதாகவும் மாற்றக்கூடிய TNSWS போன்ற முன்முயற்சிகளுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் கூறினார்.

“முன்னெப்போதும் இல்லாத ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருகையில், ஒரு வர்த்தக தேசிய ஒற்றை சாளர முறைமையினை தாபிப்பது மிகவும் அவசியமானதாகும். அது எமது வர்த்தக போட்டித்தன்மையை அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளர்ச்சியடைவதற்கும் உதவி செய்து, ஒரு நிலைபேறான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இட்டுச்செல்லும்” என நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன வலியுறுத்தினார். 

2017ஆம் ஆண்டில் இலங்கை கைச்சாத்திட்ட உலக வர்த்தக அமைப்பின் Trade Facilitation Agreementஇன் ஒரு பகுதியாக, ஒரு TNSWSஇனை அமுல்படுத்துவது அவசியமாகும். ஒரு TNSWSஇனை அமுல்படுத்துவதற்கு 2022இல் அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

கடந்த வருடத்தில், TNSWS செயற்றிட்டத்தை முன்னின்று வழிநடத்துவதற்காக ஒரு செயற்றிட்ட அமுலாக்கப் பிரிவை நிறுவுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா இலங்கை அரசுக்கு வழங்கியது.

செயலமர்வின்போது TNSWS பற்றி விவாதிக்கும் ஒரு குழு 

செலமர்வினை தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உட்பட அரச மற்றும் தனியார்துறையினைச் சேர்ந்த பங்குதாரர்கள்.

செயலமர்வின்போது குழுவிடம் ஒரு கேள்வியை முன்வைக்கும் ஒரு பங்கேற்பாளர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்குகள் ஒருமுகப்படுத்தலுக்காக பங்குதாரர்களின் அனுமதியைப் பெற்றுள்ள...

2024-07-24 12:23:55
news-image

HNB Finance இன் "ஊக்குவிக்கும் அபிவிருத்தி...

2024-07-23 15:04:18
news-image

பிரான்ஸில் இடம்பெற்ற பிரசிடென்ட் கிளப் மாநாட்டில்...

2024-07-23 15:07:02
news-image

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு கட்டமைக்கப்பட்ட விலையிடும்...

2024-07-22 20:28:40
news-image

இலங்கை மருத்துவ கல்லூரி கவுன்சிலின் அங்கீகாரம்...

2024-07-20 17:04:59
news-image

அடுத்த Zesta விளம்பரத்துக்காக இலங்கை தேயிலை...

2024-07-22 15:12:24
news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16