மான்னார் பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை (10) அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் விசேட புலானய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, மன்னார் பேசாலை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்திச்செல்லப்பட்ட போதே பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.
இதன்போது, கூலர் ரக வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களாக பேசாலை பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM