இலங்கை தமிழர்களுக்கான ஒரு மிதவாதக்குரல்

10 Jul, 2024 | 11:42 AM
image

ரி. இராமகிருஷ்ணன்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு 15 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப்போரின் விளைவான உணர்வதிர்ச்சியில் இன்னமும் விடுபடமுடியாமல் இருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தனால் பெரிய முன்னேற்றத்தைக் காண்பதற்கு சம்பந்தனால் இயலாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒருநிலைப்படுத்தும் சக்தியாக நோக்கப்பட்டு வந்திருக்கிறார். சிங்கள தலைமைத்துவம் உட்பட சகலருடனும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

தமிழர்களின் தலைவர்

இலங்கை தமிழ் அரசு கட்சியை 1949ஆம் ஆண்டில் தாபித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் ஒரு சீடரான சம்பந்தன் அந்த கட்சியையும் உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக 1977ஆம் ஆண்டில் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டார். தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் கூட்டணி பெருவெற்றி பெற்றது.

1983 ஜூலை தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத வன்செயலை அடுத்து பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள். அதனால் புதுடில்லி இனப்பிரச்சினையில் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

1984 ஒக்டோபரில் தாயார் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து ராஜீவ் காந்தி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் ஈடுபாட்டின் தன்மை மாறியது.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை கையாள்வதில் இந்தியாவின் மாற்றத்தை சம்பந்தன் கண்டுகொண்டார். தொடக்கத்தில் இருந்து இலங்கை தமிழர்களின் ஏகபிரதிநிதியாக இருந்துவந்த கூட்டணி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாக மாறியது. இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் ஒரு தீர்வு காண்பதற்கு நடத்தப்பட்ட 1985 திம்பு பேச்சுவார்த்தைகளில் இதை காணக்கூடியதாக இருந்தது. பிறகு இந்தியா கூடுதலான அளவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடனேயே விவகாரங்களை கையாளத் தொடங்கியது.

1987 ஜூலை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் ராஜீவ் காந்தி சமாதான உடன்படிக்கையை செய்தபோது அதில் கைச்சாத்திட்ட ஒரு தரப்பாக விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் பிரதானமாக அவர்களுடனானதாகவே இருந்தது. இந்த அணுகுமுறை சம்பந்தன் உட்பட தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியுடன் மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தம் சமாதான  உடன்படிக்கையின் ஒரு முக்கியமான விளைவாகும். ஆனால், அதற்கு தமிழ்த் தலைவர்களிடம் இருந்து ஒரு முழு மனதுடனான ஆதரவு இருக்கவில்லை.

1985ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் மற்றும் நீலன் திருச்செல்வம் போன்ற படித்த பல மிதவாத தமிழ்த் தலைவர்களை விடுதலை புலிகள் கொன்றொழித்தனர்.

2000 ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் விட்டுவைக்கப்பட்ட சொற்ப எண்ணிக்கையான  தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் முக்கியத்துவம் பெறத்தொடங்கினார். ஒரு காலத்தில் விடுதலை புலிகளின் 'கொலைப்பட்டியலில்' இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட சம்பந்தன் அன்றைய கட்டத்தில்  நடைமுறைச் சாத்தியமான ஒரு அணுகுமுறையாக விடுதலை புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கி 2001 பாராளுமன்ற தேர்தலின்போது அவர்களின் "விடுதலைப் போராட்டத்தை" ஆதரித்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு  2001ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழர்களின் "ஏகபிரதிநிதியாக" விடுதலை புலிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி 2001 தேர்தலில் 15 ஆசனங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 109 ஆசனங்களைக் கைப்பற்றி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்தார். அடுத்த வருடம் அவரின் அரசாங்கம் நோர்வே நாட்டின் அனுசரணையில் விடுதலை புலிகளுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டது.

2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சம்பந்தன் ஒரு தீவிரவாத அல்லது மோதல் அணுகுமுறையை தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பை மிகுந்த நிதானத்துடன் வழிநடத்தினார். பதவியில் இருந்த அரசாங்கங்களுடன் கூட்டமைப்பு ஒத்துப்போகாத சந்தர்ப்பங்களும் இருந்தன. உதாரணமாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டில் தீர்வொன்றை எட்டுவதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதித்துவ கமிட்டியில் இணைந்து கொள்வதற்கு அது மறுத்தது.

ஆனால், கடந்த 15 வருடங்களில் எந்தவொரு முக்கியமான தேர்தலையும் கூட்டமைப்பு பகிஷ்கரிக்கவில்லை. 2013 மாகாண சபை தேர்தலில் அது பெருவெற்றி பெற்றது. என்றாலும் சம்பந்தனால் தெரிந்தெடுத்து அரசியலுக்கு கொண்டுவந்த முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின்  (2013 - 2018) செயற்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை தந்தன.

2010, 2015 ஜனாதிபதி தேர்தல்களில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் ஒரு குறுகிய நாட்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்களாக நிறுத்தப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை ஆதரித்தது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ராஜபக்ஷவை சிறிசேன தோற்கடித்தபோது கூட்டமைப்பின் ஆதரவு அதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

பொருளாதார புனர்நிர்மாணம்

உள்நாட்டுப் போருக்கு பிறகு சம்பந்தன் முகாமின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார புனர்நிர்மாணத்தில் அன்றி பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் நிரந்தர அரசியல் இணக்கத் தீர்வு ஆகியவை மீது கவனத்தைச் செலுத்தியது. சமஷ்டி ஆட்சிமுறை மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற அடையமுடியாத குறிக்கோள்களிலும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

மகிந்த ராஜபக்ஷ 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் பெருமளவுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்நன. 

மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தேவை இருந்தது. ஆனால் கவலைக்குரிய வகையில் சம்பந்தன் முகாமின் முன்னுரிமைக்குரியவையாக அவை இருக்கவில்லை.

தமிழ்ச் சமூகத்தின் திறமைசாலிகள் மேற்கு நாடுகளிலும் உலகின் வேறு பாகங்களிலும் குடியேறிய நிலையில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பலவீனமான பிரவினர் பெருமளவு அதிகாரப் பரவலாக்கத்துக்காக சிங்கள தலைமைத்துவத்துடன் பேரம் பேசக்கூடிய நிலையில் இல்லை. 

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் இளைஞர்கள் உலகின் எந்தப் பகுதிக்கேனும் சென்று தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக வேலை செய்துகொண்டு படிக்கவே விரும்புகிறார்கள். வடக்கும் கிழக்கும் பொருளாதார ரீதியில் பலமானவையாக மாறாவிட்டால் நிலைவரம் இப்பொழுது உள்ளதைப் போன்றே தொடரும்.

சம்பந்தன் மரணமடைந்தபோது தனது அரசியல் அணிக்குள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது வெளிப்படையானது. அவரைப் போன்றே இலங்கை தமிழர்களும் கூட சமுதாயத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலைமைக்கு காரணம் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு சிங்கள தலைமைத்துவம் விருப்பமின்றி இருப்பதேயாகும்.

பொருளாதாரத்தில் தமிழர்களுக்கு பெருமளவு பரப்பை பெறுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக பாடுபடவேண்டிய நேரம் வந்துவிட்டது. உயர்கல்வியை தொடருவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.

இலங்கை தமிழர் தொடர்பில் ஒரு தார்மீகப் பொறுப்பைக் கொண்ட இந்தியா சம்பந்தன் கூறியதைப் போன்று "ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான  இலங்கைக்குள்" தமிழ்ச் சமூகம் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க வேண்டும்.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்படும் நவீன...

2024-07-24 17:25:21
news-image

அகதிமுகாமில் எழுதப்பட்ட திகில் கதை :...

2024-07-24 17:41:11
news-image

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உறுதிப்பாட்டுக்கு அவசியமானது

2024-07-24 11:57:14
news-image

ஆதாமின் பாலத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்த...

2024-07-24 11:09:06
news-image

Factum Special Perspective: மோடியின் மொஸ்கோ...

2024-07-22 17:09:20
news-image

மகிந்த – மைத்ரி : சிறப்புரிமையும்...

2024-07-22 16:33:01
news-image

நாட்டின் கடனை தேயிலை மூலம் செலுத்தும்...

2024-07-22 13:10:51
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் மாடி லைன்களுக்குப் பிறகு ...

2024-07-22 13:07:49
news-image

தொன்மங்களைப் பறிக்கும் பௌத்தம் : பகுதி...

2024-07-21 18:30:48
news-image

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய அத்தியாயம்

2024-07-21 18:30:04
news-image

உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக ரஷ்யா

2024-07-22 12:34:09
news-image

பொது வேட்பாளரை எதிர்க்கிறதா இந்தியா?

2024-07-21 18:28:46