எமது நாட்டின் நீதி கட்­ட­மைப்­பி­லி­ருந்து மரண தண்­ட­னையை நீக்­கு­மாறு பரிந்­துரை செய்­வ­தாக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழுஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது. நீதிக் கட்­ட­மைப் பில் மாற்­றம் செய்­வது தொடர்பில் பரிந்­துரை செய்­வது ஆணைக்­கு­ழு வின் வரை­ய­றை­களை மீறிய செய­லாகும் என நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க்ஷ தெரி­வித்தார்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யுடன் செய்­து­கொண்­டுள்ள ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இரு வரு­டங்­க­ளுக்கு மரணதண்­டனை அமுல்படுத்­தப்­ப­டாது. ஆனால் அந்தத் தண்­ட­னையை நீதி புத்­தக்­கத்­தி­லி­ருந்து முழு­மை­யாக நீக்கும் எதிர்­பார்ப்பும் அர­சாங்­கத்­திற்கு இல்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு மரண தண்­டனை நீக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் பரிந்­துரை செய்­துள்­ளமை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மரண தண்­ட­ட­னையை முற்­றாக நீக்­குதல் என்ற விட­யத்தில் அர­சாங்­கத்­திற்கு உடன்­பா­டில்லை. மரண தண்­ட­னையை நீக்­கு­மாறு பரிந்­துரை செய்­வது ஆணைக்­கு­ழு­வுக்­கான வரை­ய­றை­களை மீறும் செயற்­பா­டாகும். எமது நாட்டின் நீதி கட்­ட­மைப்பில் மாற்றம் செய்யும் உரிமை பாரா­ளு­மன்­றத்­திற்கு மாத்­தி­ரமே உள்­ளது.

அதேபோல் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யுடன் செய்­து­கொண்­டுள்ள ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இரு வரு­டங்­க­ளுக்கு மரண தண்­டனை அமுல் படுத்­தப்­ப­டாது. ஆனால் அதனை நீதி புத்­தக்­க­தி­லி­ருந்து முழு­மை­யாக நீக்கும் நோக்கம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. அவ்­வாறு செய்ய அர­சாங்கம் எத்­த­னிக்கும் போது நாட்டில் குற்றச் செயல்கள் அதி­க­ரிக்கும்.

ஆணைக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது போன்று 60 நாடுகள் மரண தண்­ட­னையை அமுல் படுத்­தா­தி­ருப்­பது உண்­மைதான். எனினும் எமது நாட்­டிலும் மரண தண்­டனை நீதி புத்­கத்தில் உள்­ளதே தவிர அமுலில் இல்லை என்­பது தொடர்பில் ஆணைக்­குழு அவ­தானம் செலுத்த வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமக்கான வரையறைகளை கருத்திற்கொண்டே செயற்படும். அது போன்று அரசியலமைப்பு விடயங்களில் தலையீடு செய்யும் அதிகாரங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றார்.