இசுறு உதானவின் அதிரடியில் திகைத்துப்போன தம்புள்ள சிக்சர்ஸ் இறுதியில் வெற்றிபெற்றது

Published By: Vishnu

10 Jul, 2024 | 12:44 AM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 12ஆவது போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 25 ஓட்டங்களால் தம்புள்ள சிக்சர்ஸ் அணி வெற்றிகொண்டது.

அப் போட்டியின் 13ஆவது ஓவரில் கோல் மார்வல்ஸ் 8 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் தம்புள்ள சிக்சர்ஸ் மிக இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மத்திய வரிசை வீரர் இசுறு உதான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது தொடர்ச்சியான இரண்டாவது அரைச் சதத்தைக் குவித்து தம்புள்ள சிக்சர்ஸ் அணியை திணறவைத்தார். 

ஆனால், சமிந்து விக்ரமசிங்க கடைசி ஓவரின் முதல் பந்தில் இசுறு உதானவை ஆட்டம் இழக்கச் செய்ததும் தம்புள்ள சிக்சர்ஸ் அணி வெற்றிபெறுவது உறுதியாயிற்று.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

திறமையாகவும் பொறுமையடனும் துடுப்பெடுத்தாடிய இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

சமிந்த விக்ரமசிங்க, டில்ஷான் மதுஷன்க (2) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 38 ஓட்டங்களே தம்புள்ள சிக்சர்ஸ் இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டாமாக இருந்தது.

பந்துவீச்சில் கவிந்து நடீஷான் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசுறு உதான 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 19.4 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கோல் மார்வல்ஸ் அணியின் மத்திய வரிசை வீரர் இசுறு உதான இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 38 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்து எதிரணியைப் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

இசுறு உதான 9ஆவது விக்கெட்டில் மஹீஷ் தீக்ஷனவுடன் சாதனைமிகு 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார். லங்கா பிறீமியர் லீக் வரலாற்றில் 9ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

ஆனால், கடைசி ஓவரை சமிந்து விக்ரமசிங்க கட்டுப்பாட்டுடன் வீசி இசுறு உதானவின் விக்கெட் உட்பட இரண்டு விக்கெட்களை வீழ்த்தி தம்புள்ள சிக்சர்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.

உதானவைவிட அலெக்ஸ் ஹேல்ஸ் (17), சஹான் ஆராச்சிகே (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் நுவன் துஷார 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடைசி ஓவரை மாத்திரம் வீசிய சமிந்து விக்ரமசிங்க 4 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

துடுப்பாட்டத்திலும் அசத்தி அரைச் சதம் குவித்த சமிந்து விக்ரமசிங்க ஆட்டநாயகனானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலேசியாவை 114 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்களாதேஷ்...

2024-07-24 22:27:08
news-image

தாய்லாந்தை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக...

2024-07-24 22:23:51
news-image

இலங்கை குழாத்திலிருந்து துஷ்மன்த சமீர நீக்கம்...

2024-07-24 14:58:45
news-image

2027 உலகக் கிண்ணத்தில் ரோஹித், விராத் ...

2024-07-24 11:19:28
news-image

Colombo Panthers கூடைப்பந்தாட்ட கழகத்துக்கு Driveline...

2024-07-24 17:56:31
news-image

2024 ஐசிசி ரி20 உலகக் கிண்ணம்...

2024-07-23 18:12:26
news-image

ஒலிம்பிக் செல்லும் வீர்ரகளுக்கு ஊக்கமளித்த இராணுவ...

2024-07-24 17:59:39
news-image

இலங்கை ரி20 அணியின் புதிய அணித்...

2024-07-23 13:21:35
news-image

அறிமுக வீரருக்குரிய பந்துவீச்சு சாதனையை புதுப்பித்தார்...

2024-07-23 13:14:21
news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37