நிஸ்ஸன்கவின் சதம் வீண்போனது; கண்டி பெல்கன்ஸின் வெற்றியை இலகுவாக்கிய சந்திமால், கமிந்து

Published By: Vishnu

09 Jul, 2024 | 11:12 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் ஜெவ்னா கிங்ஸை எதிர்த்தாடிய கண்டி பெல்கன்ஸ் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

ஜெவ்னா கிங்ஸ் சார்பாக பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்தபோதிலும் தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அரைச் சதங்கள் அதனை வீணடித்து விட்டது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட அப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 230 ஓட்டங்களைக் குவித்து இலகுவாக வெற்றிபெற்றது.

அண்ட்றே ப்ளெச்சர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து தினேஷ் சந்திமால், 2ஆவது விக்கெட்டில் மொஹமத் ஹரிஸுடன் 58 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் கமிந்து  மெண்டிஸுடன் 72 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

தினேஷ் சந்திமால் 37 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார். மொஹமமத் ஹரிஸ் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது  விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து கண்டி பெல்கன்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் தப்ரெய்ஸ் சம்சி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைக் குவித்தது.

பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 59 பந்துகளில் 16 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆரம்ப விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 112 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் ரைலி ரூசோவுடன் 50 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அவிஷ்க பெர்னாண்டோவுடன் 40 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்ட போதிலும் அது பின்னர் வீண் போனது.

குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் ரைலி ரூசோவ் 18 பந்துகளில 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: தினேஷ் சந்திமால்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு...

2026-05-21 09:50:14
news-image

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் முழுமையான...

2026-05-20 19:00:39
news-image

சூரியவன்ஷியின் அசுர வேக துடுப்பாட்ட உதவியுடன்...

2026-05-20 04:56:02
news-image

பாக். வீரர்கள் மசூத், அகா, ரிஸ்வான்...

2026-05-19 23:10:45
news-image

மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்டத்தில் பங்கேற்கும்...

2026-05-19 18:17:47
news-image

இலங்கை மகளிர் 'ஏ' ரி20 குழாத்தில்...

2026-05-19 15:14:35
news-image

LPL 6ஆவது அத்தியாயத்தில் ஜெவ்னா கிங்ஸின்...

2026-05-19 13:27:27
news-image

ப்ளே ஓவ் தகுதியை சன்ரைசர்ஸ், குஜராத்...

2026-05-19 10:03:45
news-image

பங்களாதேஷின் முஷ்பிக்குர், லிட்டன் தாஸ் துடுப்பாட்டத்தில்...

2026-05-19 03:17:48
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-19 03:11:43
news-image

எல்பிஎல் 6ஆவது அத்தியாயம் எஸ்எஸ்சியில் ஆரம்பம்;...

2026-05-19 02:39:44
news-image

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை புதுப்பித்தார்...

2026-05-18 17:23:02