அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை - நலன்புரி நன்மைகள் சபை

Published By: Vishnu

09 Jul, 2024 | 08:15 PM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதலாம்  கட்டத்தில் தகுதி பெற்ற 18  இலட்சத்துக்கும் அதிகமானோரைத் தவிர இரண்டாம் கட்டத்திற்காக 450,924 விண்ணப்பங்கள்  கிடைக்கப் பெறப்பட்டுள்ளன. அவற்றில்  நலன்புரி நன்மைகள் பெறத்  தகுதியானவர்களை இனங்காணும் பணிகள்  இம்மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 1,854,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 58.5 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்திற்கு  விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க, நலன்புரி நன்மைகள் சபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், வறியவர்கள், மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் 'அஸ்வெசும' நலன்புரி வழங்கப்படுவதோடு ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமை போன்று  கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறன.

இதனிடையே, களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய Photo, Map, Voice Recording உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய கைபேசி மென்பொருள் (Mobile App) ஒன்றை நலன்புரி நன்மைகள் சபை  அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, கைபேசி மென்பொருளின் ஊடாக தகவல் சேகரிப்பை முன்னோடி திட்டமாக கொழும்பு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10