அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான் வழிபாடு..!

Published By: Digital Desk 7

09 Jul, 2024 | 05:55 PM
image

எம்மில் பலரும் பசியாறும் போது அவர்களின் விருப்பத்திற்குரிய உணவுகளை சுவைத்து ருசித்து மென்று உண்பர். இவை எம்முடைய ஜீரணத்திற்கு எளிதாக இருக்கும். பசியாறிய உணவும் எம்முடைய உடலுக்குள் ஆற்றலாக மாறும். இது மகிழ்வை கொடுக்கும் செயல். ஆனால் எம்மில் சிலருக்கு முதுமையின் காரணமாகவோ அல்லது செரிமான மண்டல சிக்கல்கள் காரணமாகவோ சுவையான உணவை ரசித்து சாப்பிட இயலாது.

இவர்கள் வைத்தியர்களின் வழிகாட்டலுடன் மருத்துவ சிகிச்சையை தொடர்ந்தாலும்  திட உணவை கூட திரவ நிலையில் தான் சாப்பிட இயலும். வேறு சிலருக்கு வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு, அவர்களின் உணவு முறையிலேயே பாரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

அதில் அவர்களுக்கு விருப்பமான உணவு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கும். இதுபோல் வயிறு உணவு சம்பந்தமான இடையூறுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஆன்மீக முன்னோர்கள் அன்ன தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என வகைப்படுத்துகிறார்கள். அதாவது இவர்களுக்கு அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் சாப்பிடுவதற்கு விருப்பமாக இருந்தாலும் அதன் அளவு குறைவாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.

இவர்கள் உணவு, இரைப்பை மற்றும் வயிறு தொடர்பான நாட்பட்ட கோளாறுகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அருகில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் நந்தி பகவானை வழிபட வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பிரதோஷ வேளையில் நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, அவருக்கு காப்பரிசி எனப்படும் நிவேதனத்தை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். காப்பரிசி என்பது நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பச்சரிசியுடன் அச்சு வெல்லத்தை கலந்து அல்லது நாட்டு சர்க்கரையை கலந்து தயாரிப்பது தான் கப்பரிசி.‌

இந்த காப்பரிசியை பிரதோஷ தினத்தன்று வீட்டில் இருந்து எடுத்துச் சென்று நந்தி பகவானுக்கு நிவேதனமாக படைத்து, பிரதோஷ பூஜை நிறைவடைந்த பிறகு அதனை நீங்களும் சாப்பிட்டு, அங்கு வருகை தந்திருக்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கினால் உங்களுடைய வயிறு மற்றும் செரிமான மண்டலம் செறிவூட்டப்பட்டு, பலமடைந்து, உங்களது அன்ன தோஷ பிரச்சனைகள் குறைவதை அனுபவத்தில் காணலாம்.

இதனை ஆயுள் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது உங்களது வயிறு தொடர்பான மற்றும் உங்களது விருப்பமான உணவை பசியாறுவது தொடர்பான உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் நீங்குவதையும் அனுபவத்தில் உணரலாம். அதன் பிறகு உங்களுடைய விருப்பத்திற்குரிய உணவை அளவுடன் சாப்பிட்டு வளமுடனும், நலமுடனும் வாழலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right