முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர் சிகிச்சை

Published By: Digital Desk 7

09 Jul, 2024 | 05:43 PM
image

இன்றைய சூழலில் இளம் பெண்களும், பாடசாலையில் உயர்கல்வி கற்கும் பெண்களும், அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் பெண்களும், வளர் இளம் பருவத்தை சேர்ந்த ஆண்களுக்கும் முகப்பரு எனும் தோல் பாதிப்புக்குள்ளாகுவது இயல்பு.‌

இந்நிலையில் தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தோலில் உள்ள கொலாஜன் எனும் புரத செல்கள் சேதமடைவதே காரணம் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், இத்தகைய பாதிப்பை சீராக்குவதற்காக தற்போது கார்பன் டையாக்சைடு லேசர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

முகப்பரு, முகப்பருவினால் ஏற்படும் வடுக்கள், முகத்தில் ஏற்படும் தழும்புகள், சத்திர சிகிச்சை உண்டாகும் தழும்புகள், மெலஸ்மா எனப்படும் தோல் பாதிப்பு , முகச்சுருக்கம், அம்மை நோயால் ஏற்படும் ஆழ்ந்த வடுக்கள் ஆகிய பாதிப்புகளை சீராக்குவதற்கு தற்போது கார்பன் டையாக்சைடு லேசர் சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.

இந்த சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் கார்பன் டையாக்சைடு லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் கொலாஜன் எனும் புரத செல்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இதன் மூலம் முகச்சுருக்கம், முகப்பரு வடுக்கள், சத்திர சிகிச்சையால் ஏற்படும் வடுக்கள் போன்றவை மறைந்து தோல் ஆரோக்கியமடைந்து முகம் பொலிவாககிறது.

சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறையில் குறைவான பக்க விளைவுகளுடன் இத்தகைய லேசர் சிகிச்சை நோயாளிகளுக்கு பலனளித்து வருகிறது. இத்தகைய சிகிச்சை  மூலம் வெகு சிலருக்கு தொற்று பாதிப்பு தோல் உரிதல், தோல் சிவந்து போதல், போன்ற குறைவான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். மேலும் கார்பன் டையாக்சைடு லேசர் சிகிச்சை மூலம் ஒக்டினிக் கெரடோஸிஸ் மற்றும் செபோஹாரிக் கெரடோஸிஸ் ஆகிய தோல் பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம்.‌

வைத்தியர் தீப்தி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியூகோசிடிஸ் எனும் சளி வீக்க பாதிப்பிற்குரிய...

2024-07-23 14:35:47
news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59