இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடையில் பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிக்கு செல்லும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மே மாதம் வழங்குவதாக கூறிய 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 1,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பலாங்கொடை முருங்கவத்த தோட்ட தொழிலாளர்கள் முருங்கவத்த தோட்த்தில் வைத்து இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வேலையில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பலாங்கொடை சிசில்டன் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நேற்று (09) காலை பணிக்கு செல்லும் வேலையில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால் இனி வரும் தேர்தலில் மலையக மக்களிடம் வாக்குகள் கேட்டு வர வேண்டாம் எனவும் இம்முறை எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM