தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கான்ஸ்டபிள் கந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா உலகளாவிய ஆன்மீக தலமான திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பூபால வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் 'கான்ஸ்டபிள் கந்தன்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் அழுத்தமான வேடத்தில் நடிக்க முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை ஷங்கர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஷங்கர் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சக மனிதர்கள் மீது அளவற்ற கருணை உள்ளம் கொண்ட காவலர் ஒருவரின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கதையாக 'கான்ஸ்டபிள் கந்தன்' உருவாகி இருக்கிறார். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM