விபத்தில் உயிரிழந்த மன்னார் மடு மாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (09) காலை 8.30 மணி முதல் மன்னார் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை கீ. ஜொனார்தன் கூஞ்ஞ கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) இரவு மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை (08) பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு 7 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்று ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 7 மணியளவில் இரங்கல் திருப்பலியும் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அவரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.
காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல் 2.45 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அருட்பணியாளரின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (9) மாலை 5 மணிக்கு பேராலயத்திலிருந்து மன்னார் சேமக்காலைக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு 5.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM