(ஆர்.யசி)

Image result for டிலான் பெரேரா virakesari

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதா அல்லது திருத்தங்கள் கொண்டுவருவதா என்பது இன்னும் உறுதியாக்கப்படவில்லை. எனினும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பிலேயே அரசியல் அமைப்பு சபை முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியல் அமைப்பு தொடர்பில் எந்தவித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது என  சில முக்கிய அமைச்சர்களின் கருத்துக்கள் உள்ளடங்கிய அறிக்கை தயாரிக்க தயாராவதாக கூறப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது ஏன் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.