யுத்­த­த்தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்காகக் கொண்டு விசேட நிதி­ய­மொன்றை இவ்­வ­ரு­டத்தில் ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

மேலும் சர்­வ­தேச வங்­கிகள் மற்றும் நாணய பரி­மாற்­றல்­களின் கேந்­திர நிலை­ய­மாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க உள்ளோம். இந்த திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு கொழும்பு துறை­முக நக­ரத்தை பயன்ப டுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மனித உரி­மை­யையும் தேசிய நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­

கெ­டுப்­பிற்கு விடப்­படும். இதன்­போது நாட்டு மக்கள் பூரண ஆத­ர­வினை வழங்க வேண்டும் என் றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேசிய இளைஞர் சம்­மே­ளன பிர­தி­நி­தி களை நேற்று

அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்துரை யாடுகை யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட வாறு கூறினார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­

சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது.

இதன்­படி வருட பூர்த்­தியின் 52 ஆவது வாரத்தில் அர­சியல் ரீதி­யாக புதிய பய­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்­கான அத்­தி­வாரம் இடப்­பட்­டுள்­ளது. மேற்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக முழு பாரா­ளு­மன்­றத்தையும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்றும் பிரே­ரணை சபையில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. 21 நுற்­றாண்டின் வளர்ச்­சிக்கு ஏற்ப புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும்.

இந்­நி­லையில் மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து உரு­வாக்கப்ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றி­யதன் பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்படுத்துவோம். இதன்­போது நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்­திற்கு கொண்டு முழு நாட்டு மக்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு பூரண ஆத­ர­வினை வழங்க வேண்டும்.

நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­த­மையின் விளை­வாக 2016 ஆம் ஆண்டின் போது இலங்கை அர­சியல் ரீதி­யாக ஸ்திர­ம­டைந்து காணப்­படும் என்றும் சர்­வ­தேச பொரு­ளா­தாரம் சீர்­கு­லையும் சந்­தர்ப்­பத்தில் இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் சிறப்­பான மட்­டத்தை காண்­பிக்கும் என்றும் சர்­வ­தேச பிர­நி­திகள் நம்­பிக்கை வெளியிட்ட வண்­ண­முள்­ளனர்.

கடந்த வரு­டத்தின் போது அர­சியல் ரீதி­யான விட­யங்­க­ளுக்கே நாம் முக்­கி­யத்­துவம் கொடுத்தோம். இருந்­த­போ­திலும் இந்த வரு­டத்தின் போது தொழில் பிரச்­சி­னைகள் மற்றும் பொரு­ளா­தார விட­ய ­தா­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­க­வுள்ளோம். இதன்­படி பாட­சாலை கல்வி ,தொழில் பயிற்சி, தொழில் வாய்ப்பு ,தகுந்த சம்­பளம் ,வீட்டு வச­திகள், சுகா­தாரம் ,ஓய்­வூ­தியம் மற்றும் வள­மான வாழ்க்கை என்ற சாதா­ரண மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த வரு­டத்தின் போது தீர்வு காணப்­படும். இதனை நோக்காகக் கொண்டு அதி­க­ள­வி­லான முத­லீட்­டா­ளர்­களை இலங்­கைக்கு அழைத்து வர­வுள்ளோம். கிராம இராஜ்­ஜிய திட்­டத்தின் ஊடாக முழு கிரா­மிய பொரு­ள­தா­ரமும் நிர்­வ­கிக்­கப்­படும். இதற்­காக விசேட சபை­யொன்றும் நிறு­வப்­படும். மேலும் சுற்­றுலா துறையை பாரி­ய­ளவில் மேம்­ப­டுத்­த­வுள்ளோம்.

நாட்டின் அபி­வி­ருத்­தி­யையும் பொரு­ளா­தா­ரத்­தையும் நோக்காகக் கொண்டு தொழில் நுட்பம் சுற்­றுலா விவ­சாயம் என்­ப­வற்­றுக்கு விசேட வல­யங்கள் உரு­வாக்­கப்­படும்.

இதே­வேளை சர்­வ­தேச நாணயத் துறை­யிலும் வங்கி கட்­டுப்­பாட்டு துறை­யிலும் இலங்­கையை உலகின் கேந்­திர நிலை­யமா மாற்­று­வ­தற்கு எத்­த­னித்­துள்ளோம். இந்த திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு துறை­முக அபி­வி­ருத்தி நக­ரத்தை பிர­யோ­கிக்க உள்ளோம். இதற்­காக சட்­ட­ரீ­தி­யாக திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­படும். பொரு­ளா­தார நலன் சார்ந்த திட்­டங்கள் தொடர்­பி­லான சட்­டத்­திட்­டங்­களில் பல்­வேறு குறைப்­பா­டுகள் நில­வு­கின்­றன. இவை­ய­ணைத்தும் நிவர்த்தி செய்­யப்­படும்.

அதே­போன்று முப்­பது வரு­ட­கால யுத்­தத்தின் கார­ண­மாக வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் பெரு­ம­ளவில் பாதிப்­ப­டைந்துள்ளன. இதன்­கா­ர­ண­மாக அப்­ப­குதி இளைஞர்கள் யுவதிகள் தொழி­லின்றி வாழ்க்­கையை கொண்டு செல்­கின்­றனர். யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கு­ரிய காணி­களை விடு­வித்து மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு ஜப்­பானின் உத­வி­யுடன் விசேட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மாநாட்டை வடக்கு கிழக்கில் நடத்­த­வுள்ளோம். இத­னூ­டாக வடக்கு கிழக்கின் அபி­வி­ருத்­திக்­காக விசேட நிதி­ய­மொன்று உரு­வாக்­கப்­படும்.

அத்­துடன் உலகில் அனைத்து நாடு­க­ளிலும் மொத்த தேசிய உற்­பத்­தியில் 80 சத­வீதம் மாந­க­ரங்­க­ளி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே எதிர்­கா­லத்தில் இந்து சமுத்­தி­ரத்தின் பாரிய மாந­க­ர­மாக உருவாக்கும் நோக்குடனேயே மேல் மாகாணத்தை பாரிய மாநகரமாக உருவாக்கவுள்ளோம். இதற்கு சுமார் 20 வருடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அபிவிருத்தி துறையிற்க ஏற்ற சட்டத்திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஆகவே 2016 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாகும். இந்த வருடத்தில் யுக மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தேசிய அரசாங்கத்தின் மாற்றமிகு வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.