(நெவில் அன்தனி)
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்றுநராக 1996 உலகக் கிண்ண நாயகனும் முன்னாள் அணித் தலைவருமான சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இங்கு நடைபெறவுள்ள இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக அந்நிய மண்ணில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றின்போது சனத் ஜயசூரிய தலைமைப் பயிற்றுநராக செயற்படுவார்.
இதற்கு முன்னர் பயிற்றுநர் பதவியை சனத் ஜயசூரிய வகிக்காத போதிலும் ஒருகாலத்தில் இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவராக செயற்பட்டதுடன் தற்போதைய பதவிக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் ஆலோசகராக இயங்கிவந்தார்.
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந் நிலையில், புதிய பயிற்றுநர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்டும்வரை சனத் ஜயசூரிய இடைக்கால தலைமைப் பயிற்றுநராக செயற்படவுள்ளார்.
தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
பெரும்பாலும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் பயிற்றுநராக தெரிவுசெய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
'பயிற்றுநர் பதவிக்கு நிரந்தரமான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை தேசிய அணியை சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட சனத் ஜயசூரிய வழிநடத்துவார்' என ஏஷ்லி டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
மோசடி தொடர்பான விசாரணைகளின்போது ஐசிசி மோசடி தடுப்பு பிரிவினருக்கு ஒத்துழைக்கத் தவறினார் என்ற குற்றத்தின்பேரில் 2 வருடத் தடைக்குள்ளான சனத் ஜயசூரிய, பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கித் தவித்தார்.
எவ்வாறாயினும் ஆரம்ப காலத்தில் குறிப்பாக 1996 உலகக் கிண்ணப் போட்டியின்போது முழு இலங்கையராலும் போற்றிப் சனத் ஜயசூரிய போற்றிப் புகழப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
1996 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சம்பியனானபோது மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர் விருதை வென்றெடுத்த சனத் ஜயசூரிய, 110 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைச் சதங்களுடன் 6973 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். பகுதிநேர பந்துவீச்சாளராக 98 விக்கெட்களை வீழ்த்தினார்.
445 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 28 சதங்கள், 68 அரைச் சதங்கள் உட்பட 13430 ஓட்டங்களைக் குவித்த சனத் ஜயசூரிய, பந்துவீச்சில் 322 விக்கெட்களை வீழ்த்தினார்.
சர்வதேச ரி20 அரங்கில் 31 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர், 629 ஓட்டங்களைப் பெற்றதுடன் 19 விக்கெட்களை வீழ்த்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM