எதிர்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று திங்கட்கிழமை (8) இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தாழ்வுபாடு,தாராபுரம் மற்றும் சித்திவிநாயகர் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினும் இணைந்து குறித்த SMART வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மேலும், குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்களை வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM