(எம்.மனோசித்ரா)
ஜனநாயகத்தில் கைவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எனவே நேரத்தில் தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தலை நடத்தாமலிருப்பதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், தவிசாளரும் தொடர்ந்தும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே வேட்பாளர் என ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவந்தவர்கள், பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடாது எனக் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் இதே உத்தியையே பின்பற்றினர். தேர்தலுக்கான பணத்தை வழங்குமாறு நீதிமன்றத்தால் நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் அதிகாரம் இன்னும் 10 நாட்களில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும்.
ஆணைக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடைப்பதற்கு முன்னர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளனர். எனினும் நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஜனநாயகத்தில் கைவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும். அரசியல்வாதிகளை மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் மக்களை எம்முடன் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் இரு வாரங்களில் பெருமளவானோர் எம்முடன் இணைவர் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM