நீர் தொட்டியில் விழுந்து 3 வயதுடைய குழந்தை உயிரிழப்பு !

08 Jul, 2024 | 10:00 AM
image

மூன்று வயதுடைய  குழந்தையொன்று வீட்டின் நீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.    

கிழக்கு மீத்தெனிய பகுதியை சேர்ந்த 3 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.    

குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிப்பாட்டுவதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் .  

பின்னர் அவரது  ஒன்பது வயது குழந்தையின் உடலைக் கழுவி வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் இருந்தி விட்டு சென்றுள்ளார்.  

மீண்டும் வீட்டிலிருந்து  வெளியே வந்த தாய் மூன்று வயது குழந்தையை தேடிய போது  குழந்தை நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைக் அவதானித்துள்ளார்.  

பின்னர் குழந்தை மீட்கப்பட்டு  மீத்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள்  தெரிவித்தனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:46:44
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46