கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து 27 ஆயிரத்து 850 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

கைதுசெய்யப்பட்டவருக்கு 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.