பிரபாகரன் ஆயுதத்தினால் பெறமுடியாத விடயத்தினை சம்பந்தன் பேச்சுவார்த்தை ஊடாகப் பெறப் பார்க்கின்றார் என்று சிங்களத் தலைவர்கள் தவறாக பிரசாரம் செய்தார்கள். பொய்யுரைத்தார்கள். அந்த நிலைமை இன்னமும் மாறவில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
முதலில் சம்பந்தனின் மறைவுக்காக எமது ஆழ்ந்த இரங்கல்களை நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சம்பந்தனுக்கும் எனக்கும் நிறைய உரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. சம்பந்தன் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் தீர்வினை எட்டுவதற்காக முயற்சித்தார். நல்லாட்சி காலத்தில் அவர் அதனை முன்னெடுத்தார். அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது பிரதமராக இருந்தபோது வழிகாட்டல் குழுவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
நண்பர் சுமந்திரனும் என்னுடன் அமர்ந்திருந்து செயற்பட்டதோடு ரவூப்பும் ரிஷாத்தும் இருந்தார்.
அந்தக் குழுவில் சம்பந்தன் கேட்டது இதுதான்... "ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கைக்குள் பன்மைத்துவத்தை உறுதி செய்து சம உரிமையை அளியுங்கள்" என்றுதான் கேட்டார்.
சர்ச்சைக்குரிய விடயமான வடக்கு, கிழக்கு இணைப்பு கூட வழிகாட்டல் மற்றும் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அரசியலமைப்பில் காணப்படுகின்ற பௌத்த மதத்துக்கான முதன்மை இடம் சம்பந்தமாக கூட பேசவில்லை.
அண்ணாமலை அவர்களே, பிரிவுபடாத இலங்கைக்குள் வாழவேண்டும் என்பதற்காகவே சம்பந்தன் உழைத்தார். இதனால் அவர் தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
பிரபாகரன் ஆயுதத்தினால் பெயமுடியாத விடயத்தினை சம்பந்தன் பேச்சுவார்த்தை ஊடாகப் பெறப் பார்க்கின்றார் என்று சிங்களத் தலைவர்கள் தவறாக பிரசாரம் செய்தார்கள். பொய்யுரைத்தார்கள். அந்த நிலைமை இன்னமும் மாறவில்லை.
அந்த நிலைமை மாறும் வரையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் இரண்டாவது மூன்றாவது பிரஜைகளாக வாழ விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது சம்பந்தனுக்கும் தனக்கும் இடையிலான உறவினைக் கூறினார். எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மாற்றப்பட்டு பல்லினமும் சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM