தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் ஆகியோருக்கு அடுத்ததாக சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இறுதி வரையில் உறுதியாக இருந்த ஒருவரே சம்பந்தன் என்று புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சம்பந்தன் கொண்ட கொள்கையிலேயே மிகப் பிடிவாதமாக இருந்துவந்தவொரு நபராக இருந்தார். தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் ஆகியோரின் பின்னர் சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இறுதி வரையில் உறுதியாக இருந்த ஒருவராக உள்ளார்.
சம்பந்தன் சாத்வீக முறையிலேயே தமிழ் மக்கள் பாதிக்கப்படாது தீர்வினைக் காண முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். இருப்பினும் தலைவர்கள் ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்தபோது அதற்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்புக்களையும் விடுக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, ஆயுத ரீதியாகவோ சாத்வீக ரீதியாகவோ தீர்வினை காண முடியவில்லை. தொடர்ச்சியாக எழுபது தசாப்தமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆகவே இந்த நிலைமை இனியும் தொடரமுடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த தலைமைத்துவத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM