சம்பந்தன் எப்போதும் இனங்களின் தனித்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதான எதிர்க்கட்சியின் கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய இலங்கைக்குள் பல்லின சமூகத்துக்கும் காணப்படுகின்ற தனித்துவங்களை உறுதி செய்யும் அதேநேரம், இலங்கையர் என்ற அடையாளத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் இறுதி வரையில் உறுதியாக இருந்தார்.
அதேநேரம் சம்பந்தன் தனிப்பட்ட முறையில் எனக்கு வழிகாட்டியாகவும் அறிவுரை வழங்கும் சிரேஷ்ட அரசியல் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். அதனால் அவருடைய இழப்பானது என்னை மிகவும் பாதிப்பதாக இருக்கின்றுது.
அதுமட்டுமின்றி சம்பந்தனின் மறைவானது பொதுமக்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும். அவருடைய வெற்றிடத்தினை நிரப்புவது எதிர்காலத்தில் மிகவும் கடினமானதாகும்.
அத்துடன், சம்பந்தன் எப்போதும் இனங்களின் தனித்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
அதேநேரம் அவர் நீதிக்கான கோரிக்கையை முன்வைத்தபோது பாரிய அழுத்தங்களுக்கும் உள்ளாகிருந்தார். எனினும் அவர் அந்தக் கோரிக்கையை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுத்துவந்தார்.
அவருடைய மறைவு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது கனவு நனவாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அவரது நான்கு தசாப்த அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்து நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM