சிட்னியில் வீட்டில் தீ - மூன்று சிறுவர்கள் பலி - குடும்பத்தவர்களை காப்பாற்றுவதை தடுக்க முயன்ற தந்தை கைது

07 Jul, 2024 | 04:36 PM
image

சிட்னியின் மேற்கில் வீடொன்றில்  ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் தந்தையை கைதுசெய்துள்ள காவல்துறையினர்  இது குடும்பவன்முறைச்சம்பவமாக இது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

லாலோர் பார்க்கில் உள்ள பூங்காவிற்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர் அவர்கள் அங்கு சென்றவேளை வீடு முற்றாக தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மற்றும் நான்கு வயது சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

பத்து மாத பெண் குழந்தையின் உடல் தீ அணைக்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்பது வயது சிறுமியையும் மூன்று சிறுவர்களையும் அவர்களின் தாயாரையும் மருத்துவனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் தீயில் சிக்குண்டவர்களை காப்பாற்றுவதை தடுக்க முயன்ற 29 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அவர் அந்த பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09