இலங்கை கிரிக்கெட் அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி 1996 உலக கிண்ண வெற்றிக்கு பின்னர் பணம் பெருமளவு வரத்தொடங்கிய பின்னரே இந்த நிலை உருவாக தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்
சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கேள்வி- இலங்கை அணி ரி20 உலககிண்ணத்தின் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது-எனினும் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா போன்ற அணிகள் சுப்பர் 8 சுற்றிற்குள் நுழைந்தன இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்- எங்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு இன்று கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது.
ரி20 உலக கிண்ணபோட்டிகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றி குறித்து பேசும் நான் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் நிலையில் ஆப்கான் தற்போது காணப்படுவதை பார்க்கின்றேன்.
1996 இல் எங்கள் கிரிக்;கெட் நிர்வாகம் செயற்பட்டது போன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குறித்தும் நாடு குறித்தும் மாத்திரம்கவனம் செலுத்துகின்றது.
இலங்கையில் அவ்வேளை சில தனிநபர்கள் உண்மையாகவே கிரிக்கெட்டை நேசித்தார்கள் ,தங்கள் நேரம் பணத்தை அதற்காக ஒதுக்கினார்கள்.அனா புஞ்சிவே, ராஜமகேந்திரன், தகம் விமலசேன ,காமினிதிசநாயக்க, என்எம் பெரேரா ,போன்ற சிலர்.
அவர்கள் தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்க்காமல் பெரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள். எனினும் 1996ம் ஆண்டின் பின்னர் கிரிக்கெட் பெரும்வர்த்தகமாக மாறிவிட்டது - பணம் வந்தது, அனுசரணையாளர்கள் வந்தார்கள்,தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமைகளும் கிடைத்தன.
இந்த மாற்றம் கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் ,பற்று, மோகத்திற்கு பதில் அதிலிருந்து பலன்களையும் புகழையும் பெறவேண்டும் என்ற எண்ணம்தலைதூக்கும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.
உண்மையான புகழ் இல்லாத ஒரு சில தனிநபர்கள் தற்போது இலங்கை கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.அவர்களின் தீர்வுகள் எதிர்பார்த்த ஞானத்தை பிரதிபலிக்கவில்லை,
இதன் காரணமாகவே எங்கள் கிரிக்கெட் நிர்வாகத்தை முழுமையாக மாற்றவேண்டும் என நாங்கள் தெரிவிக்கின்றோம்.
கேள்வி - கிரிக்கெட் நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உபகுழு வழங்கிய அறிக்கையின் படி கிரிக்கெட் சீர்திருத்த குழு நியமிக்கப்பட்டது-கிரிக்கெட்டின் வீழ்ச்சி குறித்து ஆராயும்போது உங்கள் குழுவின் அனுபவங்கள் என்ன?
பதில்-கிரிக்கெட் சீர்திருத்த குழுவின் அறிக்கையை கோருவதற்கு முன்னர் நாங்கள் எங்கள் அறிக்கைக்கான தகவல்களை பெற்ற வேளை குறிப்பிடத்தக்க அனுபவங்களை பெற்றோம்.
கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய பலவீனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.கிரிக்கெட் நிர்வாகம் தகுதிவாய்ந்தவர்களின் கரங்களிற்கு செல்லவேண்டும்.
இதில் இரண்டுவிடயங்கள் உள்ளன,முதலில் கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம்,இரண்டாவது கிரிக்கெட்டின் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பானது இதனை கிரிக்கெட் வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் கையாளலாம்.
அமைப்பொன்றை நிர்வாகம் செய்து நிருவனம் ஒன்றை நிர்வாகம் செய்வதற்கு சமனானது,அதற்கு திறமை வாய்ந்த தனிநபர்கள் அவசியம் ,பெரும் நிறுவனமொன்றில் பணியாற்றிய நபர் இந்திய கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கிரிக்கெட் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அவசியம் என நாங்கள் கருதுகின்றோம் அதனை ஆரம்பித்துள்ளோம்.
கேள்வி-
இலங்கையின் கிரிக்கெட் குறித்து அமைச்சரவை உபகுழு அடையாளம் கண்டுள்ள விடயங்கள் என்ன?
நாங்கள் இது குறித்து வீரர்களுடன் கலந்துரையாடினோம்,அவர்கள் எங்கள் ஆடுகளங்களின் மோசமான தரத்தை சுட்டிக்காட்டினார்கள்.
வெளிநாடுகளில் விளையாட செல்லும்போது அந்த ஆடுகளங்களில் முதல் பந்திலிருந்து தாங்கள் கடும் சவாலை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறிப்பிடத்தக்க பிரச்சினை ,எங்கள் கிரி;க்கெட் நிர்வாகம் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமலிருந்த தம்புள்ள ஆடுகளத்திற்கு மின்விளக்குகளை பொருத்துவதற்காக இரண்டு பில்லியன்களை செலவிட்டுள்ள போதிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது.
இது தவறான முதலீடு போல தோன்றுகின்றது , சமீபத்தில் 52 மில்லியன் பெறுமதியான சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தேவையில்லாதவர்களிற்கு அவற்றை வழங்கியுள்ளனர் எனவும் நான் கேள்விப்;பட்டுள்ளேன்.
அது பணம் செலவிடப்படும் விடயத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.இதற்கு தீர்வு காணாவிட்டால் எங்கள் கிரிக்கெட்டின் தராதரம் மேலும் வீழ்ச்சியடையும்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் வாக்களி;க்கும் முறை பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது,22 மில்லியன் சனத்தொகையை கொண்ட நாட்டில் 147 பேர் வாக்களிக்ககூடிய நிலை காணப்படுகின்றது- அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் இதனை விட குறைவான எண்ணிக்கையினரே கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபை தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
இதன் காரணமா வளங்களை கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு பதில் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
இந்த அமைப்பு முறை திறமைவாய்ந்த தனிநபர்கள் பங்குபெறுவதை தடுக்கின்றது.
இதன் காரணமாகவே நான் கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெறுவேன்,எனினும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபையில் எந்த வாக்கும் கிடைக்காது என முரளீதரன் தெரிவித்தார்
தனிப்பட்ட குழுவொன்று அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது இது மாறவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM