இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இஸ்ரேலிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 150000 ஏக்கர் வறண்ட புல்வெளியும் விளைநிலமும் முற்றாக கருகி அழிந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் கடும் வரட்சி காணப்படுவதால் காட்டுதீ பரவியுள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான சூழ்நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டும்,அவசியம் ஏற்பட்டால் மாத்திரமே தாங்கள் பணிபுரியும் பகுதியிலிருந்து வெளியே செல்லவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அவசர சூழ்நிலைகளில் தூதரகத்தை தொடர்புகொள்ளவும் என தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் வடபகுதியில் 2000 இலங்கையர்கள் தொழில்புரிகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM