(ஆர்.ராம்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ராஜவரோதயம் சம்பந்தனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
திருகோணமலை தபால் கந்தோர் வீதியில் உள்ள அன்னாரது பூர்வீக இல்லத்தில் நண்பகல் 12 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சமயக் கிரியைகள் நடைபெறவுள்ளதோடு பிற்பகல் 1.30 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளன. அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து பூதவுடல் தகனத்துக்காக பிற்பகல் 3 மணிக்கு இந்து மயானம் நோக்கி பேரணியாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இதேவேளை, அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதோடு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சரின் சார்பில் பிரதிநிதியொருவரும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தென்னிலங்கையைச் சேர்ந்த ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ள வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இதனைவிடவும், வடக்கு, கிழக்கில் இருந்து பெருமளவான பொதுமக்களும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
91 வயதாகும் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM