(நா.தனுஜா)
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின்பேரில் நேற்று சனிக்கிழமை (06) அந்நாட்டுக்குச் செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை திங்கட்கிழமை (08) வரை அங்கு தங்கியிருந்து உத்தியோகபூர்வ இருதரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஏற்கனவே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின்பேரில் கடந்த 1 - 7 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ மேற்கொண்டிருந்த அமைச்சர் அலி சப்ரி, இன்றைய தினம் அங்கிருந்து சிங்கப்பூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின்போது இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாரம்பரிய நல்லுறவையும் பல்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களையும் மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதேவேளை இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ சந்திப்புக்களைத் தொடர்ந்து, நாளை மறுதினம் (09) சிங்கப்பூரில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ரொயிட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய - பசுபிக் மாநாட்டில் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM