ஜெவ்னா கிங்ஸ் இலகுவாக வெற்றி பெற்று அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியது

Published By: Digital Desk 7

07 Jul, 2024 | 09:43 AM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (06) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 8ஆவது போட்டியில் தம்புள்ள சிக்சர்ஸ் அணியை 30 ஓட்டங்களால் ஜெவ்னா கிங்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 5 அணிகள் பங்குபற்றும் லங்கா பிறீமியர் லீக் அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் ஜெவ்னா கிங்ஸ் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.

இதன் மூலம் லங்கா பிறீமியர் லீக் வரலாற்றில் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்ற அணி என்ற சாதனையை ஜெவ்னா கிங்ஸ் நிலைநாட்டியது.

குசல் மெண்டிஸ் (18), ரைலி ரூசோவ் (12) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். (62 - 2 விக்.)

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

53 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸ்ஸன்க 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களையும் குவித்தனர்.

அவர்களை விட அணித் தலைவர் சரித் அசலன்க 13 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

உள்ளூர் வீரர்களான குசல் பெரேரா (16), தனுஷ்க குணதிலக்க (01), நுவ்னிது பெர்னாண்டோ (16) ஆகியோர் பிரகாசிக்காத நிலையில் வெளிநாட்டு வீரர்களான ரீஸா ஹெண்ட்றிக்ஸ், மார்க் செப்மன் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தம்புள்ள  சிக்சர்ஸ்  அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

எனினும் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் மார்க் சப்மன் 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் தம்புள்ள  சிக்சர்ஸ்  அணியின் வெற்றியை நோக்கிய பயணம் தளர்வடைந்தது.

தொடர்ந்து அணித் தலைவர் மொஹமத் நபி 7 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 50 பந்துகளிலல் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் ஜெவ்னா கிங்ஸின் வெற்றி  உறுதியாயிற்று.

சமிந்து விக்ரமசிங்க 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தப்ரெய்ஸ் ஷம்சி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45