சிறப்பான அரங்கேற்றம் மகிழ்வு தந்தது

06 Jul, 2024 | 11:03 PM
image

மாதவி சிவலீலன்

மிருதங்கமும் பரதமும் இஜைந்த மாலைப் பொழுதாக 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை கலாரசிகப் பெருமக்களுக்கு இன்பத்தைத் தந்தது.

ஸ்ரீ காரைக்குடி ஆர். கிருக்ஷ்ணமூர்த்தி அவர்களின் மாணவன் செல்வன் சாரங்கன் பிரபாகரன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றமும், ஸ்ரீமதி திரிவேணி சங்கரகுமார் அவர்களின் மாணவி செல்வி சிவாணி பிரபாகரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றமும் இலண்டன் Watersmeet  தியேட்டரில் அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது. 

சபையினரை வரவேற்றுக் கொண் டதில் இருந்து மேடையலங்காரம், நிகழ்வு தொடர்ச்சி வரை அனைத்துமே கச்சிதமாக மேற்கொண்டிருந்தமை சிறப்புமிகு திட்டமிடலாக காணப்பட் ட து.

மிருதங்க அரங்கேற்றத்திற்கும் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கும் புகழ் பெற்ற மிருதங்க வித்துவானாகிய காரைக்குடி ஆர் கிருக்ஷ்ணமூர்த்தியின் நெறிப்படுத்தலில் நிகழ்ந்த இந்த அரங்கேற்றத்தில் சாரங்கன் அவர்களின் மிருதங்க வாசிப்பானது நேர்த்தியான இசையரங்கைச் சபையினருக்குத் தந்திருந்து.

மிருதங்க நாதமும் விரல்களின் லாவண்யமும் அழுத்தமும் மாணவன் மிருதங்கம் மீது கொண்ட அதீத ஈடுபாட்டைக் காட்டியது. சாரங்கன் மேற்கு இலண்டன் தமிழ் பாடசாலையில் தற்போது மிருதங்க ஆசிரியராகாகப் பணியாற்றுவதன் காரணமாகவும், வாசிப்பின் நுணுக்கங்கள் தெரிந்தவராகவும் இருக்கின்ற காரணத்தாலும் சபையை தன்வசப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தார்.

இத்துறையில் மென்மேலும் வளர்ச்சி காண்பதற்கான அத்துணை தகுதிப்பாடும் உண்டென்பதை இந்த அரங்கேற்றம் தெளிவாக எடுத்துரைத்தது.

ஸ்ரீமதி திரிவேணி சங்கரகுமார் அவர்கள் கலாக்ஷேத்திரா நடனப்பள்ளியின் மாணவியும் சிறந்த நடன ஆசிரியரும் ஆற்றுகையாளருமாவார். அவர்களின் மாணவியான சிவாணியின் பரதநாட்டிய நிகழ்வு சாருகனின் மிருதங்க அரங்கேற்றத்தையடுத்து இடைவேளையின் பின் மிக திறன்பட ஆரம்பமாகியது.

சிறுவயது முதல் ஆசிரியரிடம் தான் கற்ற நடன நுணுக்கங்களையெல்லாம் மேடையில் நிகழ்த்திக் காட்டியமை மிகச் சிறப்பாக இருந்தது. புஸ்பாஞ்சலி தொடக்கம் தில்லானா வரை அனைத்தும் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. ஆசிரியரின் நட்டுவாங்கம் சிவாணிக்கு அழகாக அணி சேர்த்தது. முகபாவமும் அடவு சுத்தமும் நளினமும் ஒருங்கே அமைய நடன உருப்படிகள் இரசிக்கக் கூடியதாக இருந்தது.

இரு அரங்கேற்றத்துக்கும் ஸ்ரீமதி திலகசக்தி ஆராமுதனின் வாய்ப்பாட்டு இடப்பெற்றது. நடனத்தையும் வாய்ப்பாட்டையும் முறைப்படிக் கற்று இலண்டனில் புகழ் பெற்ற ஆசிரியராக விளங்கும் இவரது பாட்டு நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணை செய்தது.

அதேபோன்று ஸ்ரீ ஜலதரன் சிதம்பரநாதனின் வயலின் இசை வழமை போல அரங்கேற்றத்தை மெருகூட்டிக் கொடுத்தது. ஸ்ரீ பாஸ்கரன் சிறீகரம் அவர்களின் கடமும் செல்வன் டிலக்க்ஷன் மயில்வாகனம் அவர்களின் கஞ்சிராவும் அன்றைய பொழுதின் இசையை மேன்படுத்தியிருந்தது. அத்தோடு நடன நிகழ்வுக்கு சாரங்கனும் மிருதங்கம் வாசித்துத் தன் ஆற்றலை வெளிக்காட்டியிருந்தார். 

பிரதம விருந்தினராக நாட்டிய ஆசிரியர் ஸ்ரீமதி கீத்தா சிறீதரும் சிறப்பு விருந்தினராக வயலின் ஆசிரியர் ஸ்ரீ ஏ. ஜீ. ஏ ஞானசுந்தரமும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். செம்மையுற   நடந்த இவ்விரு அரங்கேற்றங்களுக்கும் காரணமாக அமைந்த பெற்றோருக்கும் மாணவர்கள் இருவருக்கும் மிருதங்க ஆசிரியருக்கும் நடன ஆசிரியருக்கும் மிகுந்த பாராட்டுதல்கள். கலைத்துறையில் சிறப்புற இருவருக்கும் நல்லதொரு எதிர்காலம் கனிந்திருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18