ஐரோப்பாவின் மிகப்பெரிய உயிர்ப்பெரிமலையான எட்னா கடந்த சிலமாதங்களாகவே மாக்மா குழம்புகளை கக்கி வரும் நிலையில், தற்போது தீ குழம்புகள் ஆறாக ஓடும் காணொளி வெளியாகியுள்ளது.

எட்னா எரிமலையின் தொடர்ச்சியான உயிர்ப்பினால் குறித்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலு குறித்த எரிமலையை ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்களும் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொளவதற்காக ஓடிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் எட்னாவின் உயிர்ப்புத்தன்மை அதிகமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த மலையின் வெப்பநிலையானது தற்போது 1000 பாகை செல்ஸியஸை தண்டியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுமார் 3000 மீற்றர் பரப்பில், 650 அடி உயரத்தில் எட்னா எரிமலை தீக்குழம்புகளையும், புகையையும் கக்கி வருவதால், இதுவரை சுமார் 10 பேர் வரையில் காயமுற்றுள்ளதோடு, குறித்த மலை பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.