மனிதர்களாகிய நாம் பிறக்கும் போதே பிறவி கர்மாவுடன் பிறக்கிறோம். இந்த கர்மா எம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை எம்முடைய சோதிட நிபுணர்களும், ஆன்மீக முன்னோர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பிறவி கர்மாவுடன்... இந்த பிறவியில் நாம் தெரிந்தும், தெரியாமலும் ஏராளமான பாவங்களையும், தவறுகளையும், குற்றங்களையும் செய்கிறோம். இதுவும் எம்முடைய கர்மாவுடன் பதிவாகி அதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கர்மாவை முழுவதுமாக நீக்க இயலாது என்பதையும், அதே தருணத்தில் அதற்கான பரிகாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் மூலமும், அதற்கு ஏற்ற வகையில் எம்முடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலமும், அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பாவங்கள் என்பது எம்முடைய ஐம்புலன்கள் வழியாக எம்மில் பதிகிறது. ஐம்புலன்கள் என்றால் கண், காது, செவி, மூக்கு, வாய் என்பது எமக்குத் தெரியும். ஒருவரைப் பற்றி புறம் பேசுவது... தவறான விடயங்களை தவறு என்று தெரிந்தும் பார்வையிடுவது... இப்படி ஒவ்வொரு புலன்களுக்கேற்ற தவறுகளை செய்து, நம் பாவங்களையும் அதனூடாக கர்மாவையும் அதிகரித்துக் கொள்கிறோம்.
இந்தத் தருணத்தில் எம்மில் பலரிடத்திலும் தற்போது கைபேசி உள்ளது. வயது வந்த ஆண், பெண் ஆகியோரிடம் உள்ள ஸ்மார்ட் போனின் நினைவகத்தில் ஆபாச புகைப்படங்களும், ஆபாச காணொலிகளும் சேமிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இவைகளை காண்பதன் மூலமாக எம்முடைய கண்கள் எனும் புலன் வழியாக கர்மா அதிக அளவில் பதிவாகிறது. இதனை தற்போதுள்ள வாழ்க்கை நடைமுறையில் தவிர்க்க இயலாது என்பதனை நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோம். எம்முடைய பிள்ளைகள், எம்முடைய குடும்ப உறுப்பினர்கள்.. பலரும் இத்தகைய குற்ற செயல்களில்... பாவ செயல்களில் ... தெரிந்தும், தெரியாமலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் ஊடாக அவர்களின் கண் எனும் புலன் கர்மா அதிகரிப்பதுடன் பார்வை திறன் குறைபாடு எனும் பாதிப்பிற்கும் ஆளாக நேரிடும்.
இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் அல்லது கண் புலன் கர்மாவை குறைக்க வேண்டும் என்றால்.. எளிய பரிகாரத்தை பின்பற்றுங்கள் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது பிரபலமான ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு தனவந்தர்களின் உதவியுடன் அந்த ஆலயத்திற்கு என தங்கத்தேர் ஒன்றினை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த தங்கத் தேரினை குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி, அந்த ஆலயத்திற்குள் வலம் வரச் செய்வார்கள். இப்படி தங்க தேர் வலம் வருவதை நீங்கள் காணும் போது... உங்களுடைய கண் புலன் கர்மாவின் வீரியம் குறைய தொடங்கும். அதே தருணத்தில் கண் புலன் கர்மா குறைய வேண்டும் என்று நீங்களும் மனதார பிரார்த்தித்து, அது தொடர்பாக நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பாவ செயல்களை முற்றாக கைவிட வேண்டும். இப்படி செய்தால் கண் புலன் கர்மா குறையும்.
உடனே எம்மில் சிலர் தங்கத் தேரை ஆலய வளாகத்திற்குள் பவனி வர செய்வதற்கான கட்டணம் அதிகம் . அதற்கு எங்களிடம் பொருளாதார ரீதியாக சக்தி இல்லை என்பர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று உங்களது வீட்டின் கிழக்கு திசை நோக்கி இருக்கும் சுவரில்.. தங்கத்தேர் புகைப்படத்தை பொருத்திக் கொள்ளுங்கள். இதனை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை நாளாந்தம் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து, பிறகு அந்த தங்கத் தேரினையும், வணங்க தொடங்குங்கள். இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களது கண் புலன் கர்மா குறையும். பார்வைத்திறன் குறைபாடு மேலும் மோசமடையாமல் அதிலிருந்து மருத்துவ சிகிச்சை மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். கண் புலன் கர்மாவை போல் எம்முடைய ஒவ்வொரு புலன்கள் வழியாக இந்த பிறவியில் நாம் பதிவு செய்யும் கர்மாக்களை குறைப்பதற்கான பரிகாரங்களும் இருக்கிறது. அதனையும் மேற்கொண்டு புலன் வழியிலான கர்மாவினை குறைத்துக் கொண்டு உங்கள் உழைப்பின் மூலமாக கிடைக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM