கவனம் ஈர்க்கும் புதுமுகங்களின் 'சீன் நம்பர் 62' பட டீசர்

06 Jul, 2024 | 06:02 PM
image

தமிழ் திரையுலகில் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி வெளியாகும் படங்கள் சாதனை படைத்திருக்கிறது. அந்த வகையில் புதுமுகங்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் 'சீன் நம்பர் 62' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆதம் ஜாமர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சீன் நம்பர் 62 ' எனும் திரைப்படத்தில் ராஜ்பால், கோகிலா கோபால், அமல் தேவ், ஐஸ்வர்யா நந்தன், கதிரவன், ஆர் ஜே வைத்தி, வசந்த் பெஞ்சமின், மனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேணு ஜி. ராம் தயாரித்திருக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் அமானுஷ்யம் தொடர்பான காட்சிகளும்.. கிறிஸ்துவ மதம் தொடர்பான காட்சிகளும், வசனங்களும் இடம் பிடித்திருப்பதால் ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right