முன்னணி நட்சத்திர இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறனின் தயாரிப்பில், 'யதார்த்த நடிகர்' விமல் நடிப்பில் தயாராகி இருக்கும் 'சார்' எனும் திரைப்படத்திலிருந்து 'பனங்கருப்பா..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சார்' எனும் திரைப்படத்தில் விமல், சாயா தேவி கண்ணன், எஸ். சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இனியன் ஜெ. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். சிராஜ் ம மற்றும் நிலோபர் சிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பனி வழங்குகிறது.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'பனங்கருப்பா பனங்கருப்பா தரிச்ச மீச...' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஜீ. வி. பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடல் வரிகளில் கிராமத்து மண்ணின் மணம்+ காந்த குரல்+ மெல்லிசை + இனிமையான தாள லயம்.. என இசை ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் நீக்கமற இடம்பிடித்திருப்பதால் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM