நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன் ' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

06 Jul, 2024 | 05:52 PM
image

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கையான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன்,  ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். இலக்கிய ரீதியிலான எழுத்தாளர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 3 எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். சிவா தயாரித்திருக்கிறார். 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் வாழ்க்கையில் பால்ய பிராயத்திலிருந்து எந்த இலக்கும் இல்லாமல் கால் போன போக்கில் பயணிக்கும் ஒருவரது வாழ்வியலை விரிவாகவும், அடர்த்தியாகவும், வீரியமாகவும் பேசும் படைப்பாக 'ஆலன்' உருவாகி இருக்கிறது என தெரிகிறது. இதனால் இப்படத்திற்கு திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்