தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக நடித்து வரும் 'டி என் ஏ' எனும் திரைப்படத்தின் மூலம் ஐந்து புதுமுக இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' என விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டி என் ஏ' எனும் திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சத்யபிரகாஷ் + ஸ்ரீகாந்த் ஹரிஹரன் + பிரவீன் சைவி+ சஹி சிவா + அனல் ஆகாஷ் ஆகிய ஐவர் இசையமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் இப்படத்தில் ஐந்து புதுமுக இசைக்கலைஞர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். அவர்கள் யார்? என்பதை படக்குழுவினர் அவர்களது புகைப்படத்துடன் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுவதாகவும், ஐந்து பாடல்களை ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM