எச்­ச­ரிக்­கை­.! நாடு முழு­வதும் மூன்று வகை­யான தொற்று நோய்கள்

Published By: Robert

06 Apr, 2017 | 10:39 AM
image

Image result for சுகா­தார அமைச்சு

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு, டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்த் தாக்­கங்கள் பரவி வரு­வ­தாக, சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில், இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து தம்­மையும், தமது சிறு பிள்­ளை­க­ளையும் இயன்­ற­ளவு பாது­காத்துக் கொள்­ளு­மாறு, மினு­வாங்­கொடை பிர­தேச வாழ் மக்­களை மினு­வாங்­கொடை சுகா­தார வைத்­திய அதி­காரிப் பிரிவின் பத்­தண்­டு­வன பொது சுகா­தாரப் பரி­சோ­தகர் எஸ். ஆர். எம். எஸ். ஆர். சமர திவா­கர எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். 

குறிப்­பாக, சிறு பிள்­ளை­க­ளுக்கு இந் நோய்கள் விரைவில் தொற்றக் கூடும் என, சுகா­தார அமைச்சு சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளதால், இது குறித்து பெற்­றோர் முன்கூட்­டியே விழிப்­பு­டனும், அவ­தா­னத்­து­டனும் செயற்­ப­டு­மாறும்  அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை, கோப்­பி­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் டெங்கு மற்றும் டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் காய்ச்சல், மிகத் துரி­த­மாகப் பரவி வரு­வது தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், இப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள எவ­ருக்­கா­வது காய்ச்சல் அறி­கு­றிகள் தொடர்ந்து மூன்று நாட்­க­ளுக்கு மேல் தென்­பட்டால், எந்­த­வித கால தாம­த­மு­மின்றி அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்­ளு­மாறும், அவர் பொது மக்­களைக் கேட்­டுள்ளார்.

இதே­வேளை, பொல்­வத்தை, பத்­தண்­டு­வன, கொட்­டு­கொடை ஆகிய பிர­தே­சங்­களில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், பன்றிக் காய்ச்சல் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் இப் பிரதேச மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01