(எம்.எம்.சில்வெஸ்டர்)
டென்னிஸ்ஸின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான தற்போது பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் போட்டியானது 1996 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் ஒருவராகிலும் பங்குபற்றாத போட்டியாக அமைந்துள்ளது.
அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் அவரது இளைய சகோதரி செரீனா வில்லியம்ஸ் ஆகியோரில் ஒருவராவது 1997 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 27 ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்துள்ளனர்.
147ஆண்டு கால விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில், 1996 ஆம் ஆண்டு பின்னர் 2024 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் இல்லாத விம்பிள்டன் டென்னிஸ் போட்டியாக இம்முறை போட்டி அமைகிறது. 2020 ஆம் ஆண்டு கொவிட் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் போட்டி நடத்தப்படவில்லை.
1997 ஆம் ஆண்டில் வீனஸ் வில்லியம்ஸ் விம்பிள்டன் அறிமுகத்தை பெற்றதுடன், அதற்கு அடுத்த வருடமான 1998 இல் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் அறிமுகமானார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரலாற்றில் இவர்கள் இருவரும் தனிநபர் போட்டிகளில் 12 சம்பியன் பட்டங்களை வென்றெடுத்துள்ளனர். இதில் 7 சம்பியன் பட்டங்களை செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளதுடன், வீனஸ் வில்லியம்ஸ் 5 பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் இவர்கள் இருவரும் இணைந்து 6 தடவைகள் (2000, 2002, 2008, 2009 2012, 2016) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இது தவிர, கலப்பு இரட்டையரில் 1998 இல் பெலாரஸின் மெக்ஸ் மிர்னியுடன் இணைந்து தனது அறிமுக விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM