நள்ளிரவில் தனியாக வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நபரை குறித்த பெண்ணின் நண்பரிடம் வசமாக சிக்கி அடிவாங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.

இச் சம்பவம் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை 12.30 மணியளவில் ஒரு பெண், தன்னுடைய நண்பருக்காகச் வீதியோரத்தில் காத்திருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில், அந்தப் பெண்ணைக் கடந்துசென்ற இளைஞர் ஒருவர் அவருக்கு அருகே சென்று, ''உன் விலை என்ன'' எனக் கேட்டுள்ளார்.

இந்தநிலையில் வீதியில் எவரும் இல்லாததை அவதானித்த அந்த இளைஞர், அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இடத்தால் சென்ற மற்றுமொரு இளைஞர், அங்கு நடந்த சம்பவத்தை அவதானித்ததையடுத்து, அந்த குறித்த பெண்ணுடன் தவறாக முயற்சித்த இளைஞரை அடித்துள்ளார். அந்த சம்பவத்தை குறித்த பெண் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.

குறித்த காணொளி தற்போது பேஸ்புக் மூலம் வைரலா தற்போது பரவி வருகின்றது.

அந்த காணொளியில் "ஒரு பெண் தனியாக நின்றுகொண்டிருந்தால்... அந்தப் பெண்ணிடம் விலை கேட்பாயா'' என்று பெண்ணுடன் தவறாக முயற்சிசெய்ய முற்பட்ட இளைஞனை வீதியால் சென்ற மற்றைய இளைஞன் அடித்து அடித்து கேட்கிறார்.