மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம் !

06 Jul, 2024 | 12:00 PM
image

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.   

இந்த  சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05)  நள்ளிரவு இடம் பெற்றுள்ளது.   

உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 42 வயதுடைய குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நேற்று அடம்பன்  வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இவரை  வாகனமொன்று  மோதிவிட்டு சென்றுள்ளது .   

இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளதுடன்   சடலம்  மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.   

பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது. 

' கம்பிகளின் மொழி பிறேம் '  என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார்  முன்னாள் போராளியாவார். 

ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த இவர் பல் துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06